நேட்டோவில் இணையும் பின்லாந்து : ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன? நேட்டோவின் 31 ஆவது உறுப்பினராக பின்லாந்து இன்று (04) இணையவுள்ளது. முன்னதாக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது, நேட்டோ கூட்டணியில் இணைவதாலேயே சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக மொஸ்கோ கூறியது. ஆனால் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைதான் பின்லாந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தமைக்கு காரணமாக மாறியுள்ளது. இதற்கிடையே போரில் உக்ரைன் வெற்றிப்பெற்றவுடன் நேட்டோவில் சேரும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பேர்க் கூறினார். இந்நிலையில், பின்லாந்தில் நேட்டோ உறுப்பினர்களின் படைகள், வளங்கள் நிலைநிறுத்தப்பட்டால் ரஷ்யா இராணுவ பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்களில் 14 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடேசா பகுதியில் இருந்து வந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசோவ் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாக இராணுவக் கட்டளைத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்பட்டது.
(Visited 5 times, 1 visits today)