நாட்டிற்காக அல்ல, பணத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைவர் – ஹர்ஷண ராஜகருணா
எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்துடன் இணைவார்களாயின் அவர்களின் நோக்கம் பணமும், அமைச்சுப்பதவிகளுமே தவிர நாட்டின் அபிவிருத்தி அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ஆளுந்தரப்பினர் கூறுவதைப் போன்று எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை. அமைச்சுப்பதவியில் மோகமும் 200 மில்லியனை விரும்புபவர்களுமே அரசாங்கத்துடன் இணைவர்
மாறாக எவரேனும் இணைவார்களாயின் அது 200 மில்லியன் ரூபாவுக்கும், அமைச்சுப்பதவிகளுக்குமேயாகும். 200 மில்லியனை விரும்புபவர்களும் இருக்கக் கூடும். அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் இணைவது நாட்டுக்காக அல்ல.
க்களுக்கு நன்மையான திட்டங்களுக்கு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே நிச்சயம் ஒத்துழைப்பினை வழங்குவோம். அதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டுமென்ற தேவை கிடையாது எனக் கூறினார்.