திருமாவளவன் என்ற பெயரில் சாலை திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 9.20 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமும் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் திருமாவளவன் தெரு தார்சாலை அமைக்கப்பட்டது அதனை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு திருமாவளவன் தெரு தார் சாலையையும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் பொதுமக்கள் கையால் துவங்கி வைத்தார்.
அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருப்போரூர் எம் எல் ஏ எஸ்.எஸ்.பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு பொது மக்களையே திறக்க வைத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியது.
திறப்பு விழாவின் போது அப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக அப்பகுதியில் குடிநீர் உப்பு தண்ணீருடன் கலந்து வருவதாகவும் இதனால் பல்வேறு நோய்களில் சிக்கி தவித்து வந்ததாகவும் தெரிவித்தனர் இது சம்பந்தமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர் அதற்கு எந்த பலனும் இல்லாமல் இருந்த நிலையில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சுத்திகரிப்பு நிலையம் அமைவதற்கு உறுதுணையாக இருந்த அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசுவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன் சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்து அதன் குடிநீரை குடித்த பின்னர் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.
இதன் கொள்ளளவு 2 ஆயிரம் லிட்டர் என்பதும் ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் லிட்டர் வரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று அப்பகுதியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.