இலங்கை செய்தி

திருகோணமலையின் முக்கிய பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி!

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையின் இன்னுமொரு பகுதியில் இன்று பௌத்த துறவிகள் விசேட பூஜைகளை செய்துள்ளதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா தெரிவித்துள்ளார்.

200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில்,  அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் இனங்காணப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பகுதியை இந்துக்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை சுத்தம் செய்த துறவிகள் கிரியைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயத்தை மீள் அமைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை