தமிழ்நாடு சார்பாக கோவையைச் சேர்ந்த 9 வீரர்
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஆறு தங்கம்,12 வெள்ளி பதக்கங்கள் வென்று,ஒட்டு மொத்த அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.கோப்பையுடன் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
கடந்த 20 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை தேசிய அளவிலான ஆறாவது வூசி சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப்பில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் 32 மாநிலங்களைச் சேர்ந்த வூசு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக கோவையைச் சேர்ந்த 9 வீரர்,வீராங்கனைகள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்..
சான்சூ,டவ்லு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு அணி வீரர்,வீராங்கனைகள் மொத்தம் ஆறு தங்கம்,12 வெள்ளி பதக்கங்கள் வென்று அசத்தினர்.மேலும் தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி கோப்பையை கைப்பற்றி உள்ளது.இந்நிலையில
கோவை திரும்பிய வூசு வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் தமிழ்நாடு வூசு சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் செயலாளர் ஜான்சன்,கோவை மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் பயிற்சியாளர் ராபர்ட் ஆகியோர் உடனிருந்தனர்..
வெற்றி பெற்று கோவை திரும்பிய தமிழ்நாடு அணிக்கு தமிழக வூசு சங்க தலைவர் அலெக்ஸ் அப்பாவு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அணி சார்பாக விளையாடிய கோவையை சேர்ந்த ஒன்பது வீரர்,வீராங்கனைகள் 2 தங்கம்,ஏழு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடதக்கது..