செய்தி தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையில் எழுத்துப் பிழையின்றி அச்சிட வேண்டும்

காஞ்சிபுரத்தில் ரொமான்சிங் பிரிண்ட் 2023 என்ற தலைப்பில் காஞ்சிபுரம் சித்தி ஈஸ்வரர் மகாலில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செந்தில்குமார் மற்றும் மாநில செயலாளர் துரை குமரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய அச்சக உரிமையாளர் நல சங்க தலைவர் ரவீந்திர ஜோஷி, பொதுச் செயலாளர் ராகவேந்திரா தத்தாபருவா , பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 37 மாவட்டங்களை சேர்ந்த  400க்கும் மேற்பட்ட அச்சக உரிமையாளர்கள் இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் மன்ற தலைவர் செந்தில்குமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , கடந்த காலத்தில் அச்சகத்துறை கோர்வை செய்து எழுத்துக்கள் பிழையின்றி தமிழ் மொழியை வளர்க்கும் அளவில் செயல்பட்டு வந்ததும் ,

தற்போதைய விஞ்ஞான கால உலகில் நவீன இயந்திரங்களைக் கொண்டும் கணினி கொண்டும் பத்திரிகையை உருவாக்குவதும், அதன் சார்ந்த செயல்பாடுகளை செய்யும் போது

தமிழ் எழுத்துக்களின் கவனம் அதிகம் கொள்ள வேண்டும் எனவும், வார்த்தைகள் பிழையின்றி வரும் நிலையில் அது தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என கூறினார்.

அச்சகத் துறையில் புதிய தொழில்நுட்பகளை தற்போதைய அச்சக உரிமையாளர்கள் கற்றுணர்ந்து தங்களை அதிகளவில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும்,

பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்த கல்வியை தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்து எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய கல்வியை பயில முயல வேண்டும் என தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் குறித்த கண்காட்சி அச்சக உரிமையாளர்கள் பார்வையிட்டு அது குறித்த சந்தேகங்களை கேட்டுப் பெற்றனர்.

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி