டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – மூவரின் நிலை கவலைக்கிடம்!
அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று பேருந்தும் டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்பர் லொறியின் ஓட்டுநரும் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறையிலிருந்து மஹகல்வெவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், ஹம்பாந்தோட்டையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் விபத்தில் சிக்கியுள்ளன.
விபத்து நடந்த பகுதி மிகவும் வளைவுகள் கொண்ட சாலை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 3 times, 3 visits today)





