ஜெர்மனியில் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிப்பு
ஜெர்மனி நாட்டில் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பராமறிப்பதற்காக வழங்கப்படுகின்ற அரசாங்கத்தினுடைய நிதி உதவியில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தகவல் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 9.6 மில்லின் மக்கள் இவ்வாறு பராமறிக்கப்பட்டு வருவதாகவும் அதாவது குறிப்பாக முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் 7 லட்சத்து 90 ஆயிரம் பேர் முதியோர் இல்லங்களில் பராமறிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளையில் 2024 ஆம் ஆண்டு இவ்வாறு பராமறிப்பவர்களுக்காக வழங்கப்படுகின்ற பணத்தில் 5 சதவீதமான அதிகரிப்பு ஏற்படவுள்ளது.
தற்பொழுது 316 யுரோக்களுக்கு 391 யுரோக்களுக்கிடையில் இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் படி அதிகரிப்பு ஏற்பட போவதாக தெரியவந்திருக்கின்றது.
2025 ஆம் ஆண்டு 4.9 சதவீதம் அதிகர்க்கப்படவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
குறித்த முதியோர் இல்லங்களில் பராமறிப்பாளர்களுடைய குறைகளை நீக்குவதற்கும் 15 சதவீதமான உயர்ச்சி ஏற்படும் என்றும் தற்பொழுது தெரியவந்திருக்கின்றது.