ஜெர்மனியில் கடனில் வீடு வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி
ஜெர்மனி நாட்டில் வீட்டு கடன் பெறுவோரின் வட்டி வீதம் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்த வீட்டு கடனை கட்டும் தொகையும் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனியில் வீட்டு கடனானது தற்பொழுது உயர்வடைத நிலையில் பல கட்டிட நிறுவனங்கள் தாங்கள் செய்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சூழல் உள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.
அதேவேளையில் தற்பொழுது வீடுகள் கொள்வனவு செய்பவர்களுடைய எண்ணிக்கையானது மிகவும் குறைவடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வகையாக வீடு வாங்குபவர்கள் முற்றாக கொள்வனவு செய்யாமல் தனி வீடுகளை வாங்குவதற்கு முயற்சி செய்து வருவதாக தெரிய வந்திருக்கின்றது.
இந்த வீட்டு கடன் வட்டி வீதமானது 4 சதவீதத்தை அடைந்திருக்கின்றது.
இதேவேளையில் 10 வருடங்களுக்குரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டால் தற்போதைய வீடு கொள்வனவு செய்யும் கடனுக்குரிய வட்டி வீதமானது 3.32 சதவீதமாக இருப்பதாகவும் தெரிய வந்திருக்கின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வீடு வேண்டுவோரின் கடன் வட்டி வீதமானது 0.3 சதவீதமான உயர்ச்சியடைந்துள்ளது.
ஆகவே வீடு வாங்குவோருடைய எண்ணிக்கையானது மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.