சிங்கப்பூரில் வீட்டு வாடகையில் ஏற்படவுள்ள மாற்றம்!
சிங்கப்பூரில் வீட்டு வாடகை வரும் மாதங்களில் குறையக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.
வீடுகளின் விநியோகம் அதிகரித்துள்ளது அதற்குக் காரணம் என்று வாரியம் கூறியது.
இவ்வாண்டுக்குள் சுமார் 40,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் தனியார், பொது வீட்டுத் திட்டங்களில் கிட்டதட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் புது வீடுகளுக்குக் குடியேறியவுடன் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டின் முற்பகுதியில் வாடகை வீடுகளை நாடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வாரியம் கூறியது.
மேலும் உலக அளவில் பொருளியல் வளர்ச்சி குறைவதாலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாலும் வீட்டு வாடகைச் சந்தை பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)