சிங்கப்பூரில் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்ட சட்டம்!
சிங்கப்பூரில் மேலும் ஒரு ஆண்டுக்கு கொரோனா தொடர்பான அதிகாரம் வழங்கும் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள், அந்த காலகட்டத்தின்போது நோய் பரவினால் அந்த சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க முடியும் என்பது ஆகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நோய் பரவல் தொடக்க காலத்தில் அந்த தற்காலிக சட்டம் சிங்கப்பூரில் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், மேலும் ஒரு ஆண்டுக்கு அது நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தின்கீழ் தான் நடமாட்ட கட்டுப்பாடுகள், முகக்கவசம் தொடர்பான வழிமுறைகள் நடப்புக்கு கொண்டு வரப்படுகின்றன.





