இந்தியா செய்தி

கொரோனாவை போல வேகமாக பரவும் மற்றொரு வைரஸ் : இருவர் பலி!

இந்தியாவில் இன்புளுவென்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

இந்த வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், எச்3என்2 இன்புளுவென்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி