கைப்பற்றப்பட்ட கார்கள்; உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கிய லாட்வியா !
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் கார்களை உக்ரைனின் போர் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குகிறது பிரபல ஐரோப்பிய நாடான லாட்வியா.
லாட்வியா இந்த ஆண்டு அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்து கார்களைக் கைப்பற்றத் தொடங்கியது, மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கைப்பற்றப்பட்ட இடங்களை நிரப்பத் தொடங்கியதால், அவற்றை உக்ரேனிய இராணுவம் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடிவு செய்தது.அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஏழு கார்கள் புதன்கிழமையன்று ஒரு டிரக்கில் ஏற்றி உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது.
1.9 மில்லியன் மக்கள் வசிக்கும் பால்டிக் தேசமான லாட்வியாவில் இரண்டு மாதங்களில் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.15 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்பட்ட ஓட்டுநர்களிடமிருந்து 200 கார்கள் கைப்பற்றப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட கார்கள் உக்ரைனுக்கு அனுப்ப ஒவ்வொரு வாரமும் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
உக்ரைனுக்கு வாகனங்களை வழங்குவதற்கு அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட Twitter Convoy எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ரெய்னிஸ் போஸ்னாக்ஸ் இது குறித்து கூறுகையில், எத்தனை ஓட்டுநர்கள்குடித்துவிட்டு கார்களை ஓட்டுகிறார்கள் என்பதை உணரும்போது உண்மையில் மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறினார்.மக்கள் குடித்துவிட்டு இவ்வளவு வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, அதனால் அவ்வாறு பறிமுதல் செய்யப்பட கார்களை உக்ரைனுக்கு அனுப்பலாம் என யோசனை தனக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு ட்விட்டரில் நன்கொடைக்கான வேண்டுகோளை அறிவித்த பிறகு, Twitter கான்வாய் ஏற்கனவே சுமார் 1,200 வாகனங்களை அனுப்பியுள்ளது. மேலும், 2022-ல் வாகன கொள்முதல், புதுப்பித்தல் மற்றும் தளவாடங்களுக்காக 2 மில்லியன் யூரோக்கள் திரட்டியது.ஒரு அரசு சாரா அமைப்பின் இந்த வெற்றிகாரமான முயற்சியால் அரசாங்கம் ஈர்க்கப்பட்டதாக லாட்வியன் நிதியமைச்சர் அர்வில்ஸ் அசெராடென்ஸ் கூறினார். மேலும், உக்ரேனியர்களை ஆதரிக்க நடைமுறையில் எதையும் செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.