கூட்டு வெடிமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் – ஜோசப் பொரல் எச்சரிக்கை!
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர்கள் கூட்டு வெடிமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை கொள்கைத் தலைவர் ஜோசப் பொரல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரே அளவில் அனைத்து நாடுகளும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்வதை காணலாம் என்றும் அவர் கூறினார்.
இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியை குறைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)