கீய்வில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகின்ற நிலையில், ரஷ்ய படையினர் பக்முட் பிராந்;தியத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில். உக்ரைனின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி கீய்வில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதிவரை ஒவ்வொரு நாளும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பிராந்திய இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆறு மணிக்கு பிறகு மக்கள் தெருவில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய உள்கட்டமைப்பில் பணிப்புரிபவர்கள், ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)