இலங்கை செய்தி

“கிண்ணியாவில் அதிரடி!” – சட்டவிரோத சிப்பி தொழிற்சாலைகள் பொலிஸாரால் முற்றுகை.

#BreakingNews #TrincomaleeNews #Kinniya #PoliceRaid #IllegalOysterFactory #info4tamils #iftamil #TamilNewsToday #திருகோணமலை #கிண்ணியா #அதிரடி

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை களப்புக்கு அருகில் இரண்டு இடங்களில் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக நடாத்தப்பட்டு வந்த இரண்டு சிப்பி தொழிற்சாலைகளை (24) முற்றுகையிட்டனர்.

#BreakingNews #TrincomaleeNews #Kinniya #PoliceRaid #IllegalOysterFactory #info4tamils #iftamil #TamilNewsToday #திருகோணமலை #கிண்ணியா #அதிரடி

திருகோணமலை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பெருமளவிலான சிப்பிகள் மற்றும் நான்கு அரைக்கும் இயந்திரங்களுடன் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்த இரண்டு சட்டவிரோத தொழிற்சாலைகள் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு. மஹிந்த திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஐய். அருண சமந்த சந்திரபாலவின் மேற்பார்வையில், பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எல். அஜித் குமாரவின் வழிகாட்டலில், மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் பண்டார உள்ளிட்ட குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டு சந்தேகநபர்களுடன் சிப்பிகளை கைப்பற்றினர்.

#BreakingNews #TrincomaleeNews #Kinniya #PoliceRaid #IllegalOysterFactory #info4tamils #iftamil #TamilNewsToday #திருகோணமலை #கிண்ணியா #அதிரடி

இந்த இரண்டு இடங்களிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்த 127 சிப்பி மூடைகள், நான்கு சிப்பி அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் குவித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அரைக்கப்பட்ட சிப்பிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அமில குணசேன, சார்ஜன்ட் (63392) பிரதீப், பொலிஸ் கொஸ்தாபல்களான (87340) அமரசேகர, (91157) மதுசங்க, (97051) பசிந்து, (93506) பவிதாஸ், (100803) ரெஜிகரன், (101318) உதார ஆகிய உத்தியோகத்தர்கள் இந்த முற்றுகையில் கலந்துகொண்டனர்.

#BreakingNews #TrincomaleeNews #Kinniya #PoliceRaid #IllegalOysterFactory #info4tamils #iftamil #TamilNewsToday #திருகோணமலை #கிண்ணியா #அதிரடி

சந்தேகநபர்கள் சிப்பிகள் மற்றும் அரைக்கும் இயந்திரங்களுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனனர்.

சந்தேகநபர்கள் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!