இலங்கை

கனடா வேலை வாய்ப்பு; விசா மோசடியில் சிக்கிய பிரதேச சபை உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் வதிவிட விசாக்களை பெற்று தருவதாக உறுதியளித்து நபர்களிடமிருந்து 5 – 20 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு பணம் செலுத்திய 25 பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு எதிராக இதுவரை 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் உத்தியோகத்தர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 2023 மார்ச் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்