கனடா தேசிய மகளிர் அணியில் இடம்பிடித்த திருநங்கை
கனடாவின் தேசிய மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள டேனியல் மெக்காஹே சர்வதேச கிரிக்கெட்டில் முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் இம்மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் இவர் களமிறங்க உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார்.
2021ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
(Visited 13 times, 1 visits today)





