செய்தி தமிழ்நாடு

கத்தியை காட்டி மிரட்டிய தனியார் கால் டாக்ஸி ஓட்டுநர்

கோவை திருச்சி ரோடு மேம்பாலத்தில் கடந்த 7ம் தேதி சென்று கொண்டிருந்த தனியார் கால் டாக்ஸி(RED TAXI)யை தொடர்ந்து வந்த மற்றொரு காரும் சுங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இடித்துள்ளன.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்ட நிலையில் அந்த கால்டாக்சி ஓட்டுநர் காரில் இருந்த கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் இதர வாகன ஓட்டிகள் கூடினர். அப்போது அந்த டாக்ஸி ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

மேலும், கோபம் வந்தா கத்தியை எடுப்பீர்களா என தனியார் காரில் வந்த பெண் ஒருவர் கேட்டதற்கு  வேறு எதற்குள் போய் கத்தியை எடுப்பார்கள் என மிரட்டும் தொணியில் பேசி இருக்கிறார்.

இதனை அந்த காரில் வந்த மற்றொரு பெண் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்யும் பொழுது அந்த பெண்ணை பார்த்து செல்போன் உடைந்து விட்டு  போய்விடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் உங்கள் மீது முட்டாமல் விட்டோம் என சந்தோசபடு  எனவும் கூறி தாக்குதலுக்கு முயன்று தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தனியார் கார் ஓட்டுநர் மோகன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கால் டாக்ஸி ஓட்டுநர் அருண் மீது ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி