ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரவுள்ள நடைமுறை!
ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் வாகனங்களின் பயன்பாடு முடிவுக்கு வரவுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் இவை முடிவுக்கு வரவிருக்கிறது.
2035ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை வெளியேற்றும் வாகனங்களின் விற்பனையை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்திற்கு ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
2030ஆம் ஆண்டிலிருந்து விற்கப்படும் அனைத்துப் புதிய வாகனங்களும் 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 55 சதவீதம் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றும் வகையில் இருக்கவேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஐரோப்பாவில் வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவைக் குறைக்க அத்தகைய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி கடைசி நேரத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் தாமதமடைந்தது.
2035ஆம் ஆண்டிற்குப் பிறகு மின் எரிபொருளைப் பயன்படுத்தும் புதிய வாகனங்களை விற்பதற்குரிய சட்டபூர்வ வழியை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கவுள்ளது.
மின் எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு Porsche, Ferrari போன்ற கார் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்க மின்கலத்தால் இயங்கும் மின்வாகனங்கள் கைகொடுக்கும் என Volkswagen, Ford முதலிய நிறுவனங்கள் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.