ஐரோப்பாவில் இனி பதற்றங்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை!
ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்த பிறகு பதற்றங்கள், அதிகரிக்கும் என பிரித்தானிய பொதுப் பணியாளர்களின் முன்னாள் தலைவர் லார்ட் டானட் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான ஃபின்னிஷ் பகுதியில் 810 மைல் தொலைவில் நேட்டோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேட்டோ முற்றிலும் ஒரு தற்காப்பு ஒப்பந்தம என்பதை மேற்கத்தேய தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என லார்ட் டானட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நேட்டோ விரைவடைவது தொழிநுட்ப ரீதியாக சரியே என்றாலும், அது ஏன் விரிவடைய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக நேட்டோ குடையின் ஒட்டுமொத்த பாதுகாப்பை நாடுவது நியாயமானது என்றாலும், எதிர்காலத்தில் பதற்றம் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
(Visited 1 times, 1 visits today)