ஐ.எம்.எஃபின் திட்டத்தினை தடைகள் இன்றி முன்னெடுக்க முயற்சிக்கும் இலங்கை : புதிய குழு நியமனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் எந்த தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இதன்படி தடைகள் காரணமாக சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடை நிறுத்தப்படுவதை தவிர்ப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
இதனை தவிர்ப்பதற்காக விசேட அதிகாரங்களுடன் விசேட பிரிவொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்குகள் மற்றும் கட்டமைப்பு வரையறைகளை அடைவதற்காக அரசாங்கம் இந்த விசேட பிரிவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
(Visited 11 times, 1 visits today)