உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 8000இல் இருந்து 4000 ஆக குறைப்பதற்கான யோசனை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான ஐவரடங்கிய எல்லை நிர்ணய குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்யவும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குழு நியமிக்கப்பட்டது.
இது தொடர்பான வர்த்தமானியை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டார்.
இந்தக் குழுவில் மஹிந்த தேசப்பிரியவுக்கு மேலதிகமாக ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரிஇ கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அறிக்கையை கையளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.