உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகிறது இந்தியா – 1960க்கு பின் அந்தஸ்தை இழந்தது சீனா
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய தரவுகளின்படி, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை பட்டியல் தற்போது இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,428 மில்லியன் எனவும், சீனாவின் மக்கள் தொகை 1,425 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 1950 இல் மக்கள் தொகை விவரங்களை சேகரிக்கத் தொடங்கியது. அதன் பிறகு ஐ.நா.வின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை.
1960ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டத்தை சீனா இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு அமெரிக்கா ஆகும். ஐக்கிய நாடுகளின் தரவு அறிக்கைகளின்படி, அமெரிக்காவின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 340 மில்லியன் ஆகும்.
2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலக மக்கள் தொகை 8.045 பில்லியனை எட்டும் என்று அந்த அறிக்கைகள் கூறுகின்றன.