உலக வர்த்தகப் போர் பெரிதாக வெடிக்கும் – டிரம்ப் பரபரப்பு எச்சரிக்கை

உலக வர்த்தகப் போரை இன்னும் பெரிதாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாகனங்கள், அலுமினியப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு சொன்னதுபோல் எல்லா வரிகளுமே ஏப்ரல் 2ஆம் திகதி நடப்புக்கு வரப் போவதில்லை என அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 2ஆம் திகதியை அவர் சுதந்திர தினம் என்று வருணித்தார்.
குறிப்பிட்ட துறைகளுக்கான வரியும் பதிலுக்குப் பதில் விதிக்கப்படும் வரியும் அமெரிக்காவுக்கு அசாதாராணமான அளவு பணத்தை ஈட்டிக் கொடுக்கும் என்று அமைச்சரவைச் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)