உணவில் நோயை உண்டாக்கும் வேதிப்பொருள் – ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
ஐரோப்பாவில் பியர் மற்றும் மாமிசத்தில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருள் உள்ளதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வில் கண்டறிந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பியர் ஆகியவற்றில் நைட்ரோசமைன்ஸ் என்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனம் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நைட்ரோசமைன்ஸ் நுரையீரல், மூளை, கல்லீரல், சிறுநீரகம், தொண்டை மற்றும் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான இரசாயனமாகும்.
ஐரோப்பாவில் உள்ள அனைத்து வயதினருக்கும், உடலில் நைட்ரோசமைன்கள் வெளிப்படும் அளவு கவலையை எழுப்புகிறது என்று ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான டைட்டர் ஷ்ரெங்க் கூறினார்.
மேலும், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட மீன், கோகோ, பியர் மற்றும் பிற மதுபானங்கள் உள்ளிட்ட உணவுகளில் நைட்ரோசமைன்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று டைட்டர் ஷ்ரெங்க் தெரிவித்துள்ளார்.