இலங்கையில் மருத்துவமனையில் முடங்கிய முக்கிய சேவைகள்
இலங்கையில் தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, மற்றுமொரு சம்பவம் எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி மட்டுமன்றி ஹஇலங்கையில் மருத்துவமனையில் முடங்கிய முக்கிய சேவைகள் இலங்கையில் தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, மற்றுமொரு சம்பவம் எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி மட்டுமன்றி ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகலை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருவதால் இது மிகவும் பிரபலமான மருத்துவமனையாகும்.
ஆனால் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிப்பது மருத்துவமனைக்கு கடும் சிக்கலாக மாறியுள்ளது. மருத்துவமனையில் இருந்த சத்திரசிகிச்சைகளுக்கான நிபுணர்கள் இருவர் பணி நிமித்தமாக வெளியூர் சென்றதே இதற்குக் காரணம்.
அவர்களுக்குப் பதிலாக ஒரு மருத்துவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் வெளிநாட்டுக்கு பயிற்சிக்காகச் சென்றுவிட்டார்.
மருத்துவமனையில் குறித்த பிரிவுக்கான சத்திரசிகிச்சைகளுக்கான விசேட நிபுணர்கள் இல்லாத காரணத்தினால் இரண்டு வாரங்களுக்கு மேலாக இங்கு தீவிர சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.ம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகலை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருவதால் இது மிகவும் பிரபலமான மருத்துவமனையாகும்.
ஆனால் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிப்பது மருத்துவமனைக்கு கடும் சிக்கலாக மாறியுள்ளது. மருத்துவமனையில் இருந்த சத்திரசிகிச்சைகளுக்கான நிபுணர்கள் இருவர் பணி நிமித்தமாக வெளியூர் சென்றதே இதற்குக் காரணம்.
அவர்களுக்குப் பதிலாக ஒரு மருத்துவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் வெளிநாட்டுக்கு பயிற்சிக்காகச் சென்றுவிட்டார்.
மருத்துவமனையில் குறித்த பிரிவுக்கான சத்திரசிகிச்சைகளுக்கான விசேட நிபுணர்கள் இல்லாத காரணத்தினால் இரண்டு வாரங்களுக்கு மேலாக இங்கு தீவிர சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.