இலங்கை

இலங்கையில் தீவிரமாக பரவும் காய்ச்சல் – பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

காச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் பாடசாலைக்கோ அல்லது வேலைக்கோ செல்லாமல் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமால் மருந்தை உட்கொள்ளலாம் என்றாலும் டிஸ்பிரின், அஸ்பிரின் அல்லது இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொண்டால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.

இரண்டாவது நாளில் காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை என்றால், மருத்துவ உதவியை நாட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!