இராணுவ தேவைகளை வளப்படுத்தும் ரஷ்யா : புதிய சட்டத்தை கொண்டுவர திட்டம்!
ரஷ்ய அதிகாரிகள் இராணுவ தேவைகளை வளப்படுத்துவதற்கு ஏற்றவாறு சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ரஷ்ய அதிகாரிகள் அதன் இராணுவத் தேவைகளை வளப்படுத்த இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு திட்டத்தை எளிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி கட்டாய இராணுவ ஆள்சேர்ப்பில் 18-30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான வயதை மாற்றுவதற்கான புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ரஷ்ய டுமா பிரதிநிதிகள் அறிமுகப்படுத்திய இந்த சட்டமூலம், நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இந்த சடம் வரும் 2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரலாம் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.