இராணுவ அணிதிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய பிரஜைகள் இருவருக்கு 19 ஆண்டுகள் சிறை!
இராணுவ அணிதிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இராணுவ பதிவு மேசை அமைந்துள்ள கட்டடத்திற்கு தீ வைத்த இரு இளைஞர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரோமன் நஸ்ரியேவ் மற்றும் அலெக்ஸி நூரிவ் ஆகியோர் கடந்த அக்டோபரில் செல்யாபின்ஸ்க் பகுதியில், பாக்கலில் உள்ள கட்டடத்திற்கு தீ வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சாட்டப்பட்ட இருவருக்கும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமைக் குழுவான சாலிடாரிட்டி சோன், இது போருக்கு எதிரான தீக்குளிப்பு தாக்குதலுக்கான கடுமையான தண்டனை எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)