ஐரோப்பா செய்தி

அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட 18 பெண் சிறை காவலர்கள் : வெளிவந்த பகீர் பின்னணி!

பிரிட்டனில் சிறை கைதிகளுடன் தகாத உறவில் இருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில், 18 பெண் சிறை காவலர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள HMP Berwyn சிறையிலேயே கடந்த ஆறு ஆண்டுகளாக கைதிகளுக்கும் பெண் காவலர்களுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதில் மூன்று பெண்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எஞ்சியவர்கள் நிலை தகவல் அறியும் உரிமை சட்டத்தினூடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 27 வயதான Jennifer Gavan என்ற காவலர், சிறையில் இருக்கும் தமது காதலருக்காக அலைபேசி ஒன்றை கடத்திச் சென்றுள்ளார்.

 

இருவரும் நெருக்கமாக இருந்த காட்சிகள் சிறைக்குள் கமெராவில் பதிவாகியுள்ளது. இவருக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பெண் காவலர், நீதிமன்றத்தால் ஆபத்தானவர் என குறிப்பிடப்பட்டுள்ள கைதியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019ல் கைதி ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில் Emily Watson என்ற காவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சட்டத்தை மீறுபவர்கள் எவராக இருந்தாலும், தண்டனை உறுதி என்பது இதில் இருந்து தெளிவாகிறது என இந்த விவகாரம் தொடர்பில் மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி