செய்தி தமிழ்நாடு

அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ.முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா மாசி மகத்தன்று நடைபெறுவது வழக்கம்,

அதன் அடிப்படையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து

அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து இன்று மாலை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முன்னதாக தேரில் எழுந்தருளிய ஸ்ரீ.முத்துமாரியம்மனுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு தேர் நிலையில் இருந்து புறப்பட்டு,

மேளதாள இசை முழக்கத்தோடு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வளம் வந்தது பக்தர்களுக்கு அருள்பாலித்தது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

இறுதியாக தேரானது கோவிலை சென்றடைந்தது.

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி