உலகம் செய்தி

நியூயார்க்கின் (New York) முதல் முஸ்லிம் மேயராக தெரிவான சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani)!

அமெரிக்காவின் நியூயார்க் (New York)  நகர மேயராக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான 34 வயதான சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஆட்சியாளர் இவராவார்.

இந்தோ-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி (Mamdani) , பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயரின் மகனும் ஆவார்.

மம்தானியை “யூத வெறுப்பாளர்” என்று ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வர்ஜீனியா (Virginia) மற்றும் நியூ ஜெர்சியில்  (New Jersey) ஆளுநரை தெரிவு செய்வதற்கான  தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இது தற்போதைய ஆட்சியில் மக்கள் கொண்டுள்ள விரக்தி நிலையை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க கரூவூலத்துறைக்கான நிதி வழங்கப்படாது, அரசாங்க ஊழியர்கள் சம்பளம் இன்றி வேலை செய்வது மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி கிடைக்காதது உள்ளிட்ட பல விடயங்கள் ட்ரம்ப் அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தி அடைய காரணமாக அமைந்தது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!