ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே நாளை புளோரிடாவில் சந்திப்பு
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
இதன்போது, அமெரிக்கா முன்வைத்துள்ள 20 அம்ச அமைதி திட்டம் மற்றும் உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகர், அமெரிக்க அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் ரஷ்யா உறுதி அளித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில் “ நிலையான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால், ரஷ்யா படைகள் பின்வாங்கினால், உக்ரைன், கிழக்கு டொன்பாஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறத் தயாராக உள்ளது என்ற செலென்ஸ்கியின் அறிவிப்புக்கு ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.





