ஐரோப்பா

கூட்டு ஆயுத உற்பத்திக்கு பால்கன் நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

அல்பேனியாவில் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் கூட்டு ஆயுத உற்பத்தி மூலம் நாட்டுக்கு உதவ பால்கன் நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

உச்சிமாநாட்டில் தனது தொடக்க உரையில் அல்பேனியா, செர்பியா, வடக்கு மாசிடோனியா, கொசோவோ, போஸ்னியா, மாண்டினீக்ரோ, குரோஷியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம், “உங்களுடனும் எங்கள் அனைத்து கூட்டாளிகளுடனும் இணைந்து தயாரிப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

” உக்ரைனில் சுமார் 500 பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன , அவை ஒவ்வொன்றும் பலம் சேர்க்கின்றன, ஆனால் புடினுக்கு எதிராக வெற்றி பெற இது போதாது. வெடிமருந்து விநியோகத்தில் உள்ள சிக்கல்களை நாங்கள் காண்கிறோம், இது போர்க்களத்தில் நிலைமையை பாதிக்கிறது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்