சாதனை படைத்த ரொனால்டோவிற்கு வாழ்த்து கூறிய யூடியூப் நிறுவனம்

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு யூடியூப் நிறுவனம் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் அண்மையில் புதிதாக யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்தார்.
அதில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று உலக சாதனை படைத்தது.
இந்த நிலையில் யூடியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 19.7 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றதற்காக யூடியூப் நிறுவனம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவை GOAT எனக் குறிப்பிட்டு யூடியூப் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 19 times, 1 visits today)