பொலிஸ் தடுப்பு காவலில் உயிரிழந்த இளைஞர் – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜமாலியா பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து திருகோணமலை ஜமாலியா பகுதியில் டயர்கள் எரிக்கப்படுவதோடு அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.





