மொராக்கோ முழுவதும் சுகாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை கோரி இளைஞர்கள் போராட்டம்
மொராக்கோ முழுவதும் நூற்றுக்கணக்கான இளம் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி, சிறந்த அரசு சேவைகள் மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சுகாதாரம் மற்றும் கல்வியில் அவசர முதலீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
GenZ 212 என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள், காசாபிளாங்கா, ரபாத், மராகேஷ் மற்றும் அகாதிர் உள்ளிட்ட 11 நகரங்களில் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்தனர், கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)





