பலாங்கொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் படுகொலை

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு மரணித்தார்.
மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை தொடர்பாக 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 25 times, 1 visits today)