வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்
 
																																		வவுனியா – குருமன்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (30) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
29 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது கணவரின் உறவினர்களுடன் அவர்களது வீட்டில் வசித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
