இளம் வீரரான சுப்மன் கில்லின் சொத்து மதிப்பு வெளியானது!
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மிக சிறந்த வீரராக இருந்து வரும் சுப்மன் கில்லின் முழு சொத்து விவரம் வெளியாகிவுள்ளது.
சுப்மன் கில் தனது 24 வயதிலேயே கோடிக் கணக்கில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். இந்த ஆண்டு கில் தனது சிறப்பு மிக்க ஆட்டத்தால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர், ஆசிய கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர், இரட்டை சதம் விளாசிய வீரர் போன்ற பல சாதனைகளைப் படைத்துள்ளார், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் ஆறு சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.
குஜராத் அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா விலகிய நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுப்மன் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் சொத்து விவரம் வெளியாகியுள்ளது. பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ரூ.3 கோடி, ஐபிஎல் தொடர் மூலமாக ரூ.8 கோடி, ஒவ்வொரு டி20 போட்டிகளுக்கும் ரூ.3 லட்சம், ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளுக்கும் ரூ.15 லட்சம் என்று ஊதியம் வாங்கிவருகிறார்.
கில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளார். குறிப்பாக கேசியோ, பஜாஜ், அலையன்ஸ், டாடா கேப்பிட்டல், பீட் எக்ஸ்பி, எங்கேஜ், மஸ்ஸில் பிளேஸ், சியர்ஸ் டயர்ஸ், ஜில்லட் நிறுவனம், ஆக்கோ இன்சூரன்ஸ், பாரத் பே, மை லெவன் சர்க்கில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக உள்ளார்.
இதுப்போக ட்விட்டரில் 5 மில்லியனுக்கும் அதிகாமான ஃபாலோவர்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏறத்தாழ 11 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவருக்கு உண்டு. ஆக, சமூக வலைத்தளங்களின் மூலம் ஆண்டுக்கு பல கோடி வரை சம்பாதிக்கிறார்.
சுப்மன் கில் ரேஞ்சு ரோவர் எஸ்யூவி கார் மற்றும் மஹீந்திரா தார் ஜீப்பும் வைத்திருக்கிறார். பஞ்சாப் மற்றும் ஃபிரோஸ்பூரில் இரண்டு வீடுகளுக்கு சொந்தக்காரர்.
இந்த சிறு வயதிலேயே கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் இவரைப் பார்த்தால், மிடில் க்ளாஸ் இளைஞர்களும் பேட்டை தூக்கிக்கொண்டு மைதானத்திற்கே புறப்பட்டுவிடுவார்கள் என்றுத்தான் தோன்றுகிறது.