பாகிஸ்தானை இந்தியா ஆக்கிரமிக்கக் கூடும்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

ஜம்மு – காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தானை ஆக்கிரமிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா மொஹமட் அஷீப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த அவர், அவ்வாறான ஆக்கிரமிப்பு இடம்பெறுமாயின் அதற்கு பொருத்தமான பதிலளிப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து, பாகிஸ்தானுடன் யுத்தத்தில் ஈடுபடுவதற்கு இடமுண்டு.
இது இடம்பெறக் கூடிய விடயமாகும். அவ்வாறு இடம்பெறுவதற்குத் தெளிவான சாத்தியம் காணப்படுகிறது. அதனை எந்தவிதத்திலும் புறக்கணிக்க முடியாது.
நாம் முழுமையாகத் தயாராக உள்ளதுடன் நிலையாகவும் உள்ளோம். எமது வான், தரை மற்றும் கடற்பரப்புக்குள் அத்துமீறல் இடம்பெறுமாயின் அதற்கு பதிலளிக்கப்படும்.
கடவுளின் பெயரில் உரிய பதிலளிப்புகள் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா மொஹமட் அஷீப் தெரிவித்துள்ளார்.