WTC Final – 212 ஓட்டங்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். ரபாடா பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஜோடி திணறியது.
இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஹெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்மித் உடன் பியூ வெப்ஸ்டர் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் 76 பந்தில் அரைசதம் அடித்தார். தொடரந்து விளையாடிய அவர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை மார்கிராம் வீழ்த்தினார்.
இதனால் தேனீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
வெப்ஸ்டர் 55 ரன்களுடனும், அலேக்ஸ் கேரி 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிவடைந்த ஆட்டம் தொடங்கியதும் ரபாடாவின் பந்து வீச்சு அபாரமாக எடுபட்டது.
இதனால் ஆஸ்திரேலியா 56.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 212 ரன்னில் சுருண்டது. ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.