சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் உட்பட்ட குழுவினர் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் இன்று (26) வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பொலன்னறுவையில் இருந்து உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்திரங்கிய சுவாமிகள் உட்பட்ட குழுவினரை நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர வரவேற்றார்.
அங்கிருந்து வாகன பேரணி மூலமாக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுவாமி அழைத்து வரப்பட்டார்.

ஆலயத்தில் நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.
சுவாமி ஆலத்தில் நாள்தோறும் முன்னெடுக்கப்படுகின்ற அன்னதானத்தை ஆரம்பித்து வைத்ததுடன் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கினார்.
தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள் ரஜீவன் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தார்.





