£11.7 பில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிக நீளமான தொங்கு பாலம்
உலகின் மிக நீளமான தொங்கு பாலம் தற்போது துருக்கியில்(Turkey) உள்ளது, ஆனால் இத்தாலிய(Italy) அரசாங்கம் அதன் மிகப்பெரிய லட்சிய மெசினா(Messina) பாலத் திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு புதிய சாதனை படைக்கும்.
அந்தவகையில், உலகின் மிக நீளமான தொங்கு பாலத்தை கட்டும் இத்தாலிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்புதல் மூலம் இத்தாலியின் தெற்குப் பகுதியான கலாப்ரியாவின்(Calabria) பிரதான நிலப்பகுதியை சிசிலியுடன்(Sicily) இணைக்கும்.
£11.7 பில்லியன் செலவில் அமைக்க கூடிய சர்ச்சைக்குரிய மெசினா பாலத் திட்டம் கடந்த மாதம் பெரும் தடங்கலை எதிர்கொண்ட பிறகு தற்போது ஒப்புதல் பெற்றுள்ளது.

400 மீட்டர் நீளமுள்ள இரண்டு கோபுரங்களைக் கொண்ட இந்தப் பிரம்மாண்டமான பாலம் நம்பமுடியாத அளவிற்கு 3.3 கிமீ நீளமாக இருக்கும்.
இதில் இரண்டு ரயில் பாதைகள் மற்றும் மூன்று போக்குவரத்து பாதை அமைக்கப்படும்.
இத்தாலியில் பயணிக்கும் பிரித்தானியர்களால் இது குறிப்பாக வரவேற்கப்படும். ஏனெனில் இது படகு பயணத்துடன் ஒப்பிடும்போது சிசிலிக்கான அவர்களின் பயணத்தை வெறும் பத்து நிமிடங்களாகக் குறைக்கும்.





