உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கைக்கு வருகை

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான எம்எஸ்சி மரியெல்லா (MSC Mariella) நேற்று (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது.
மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த குறித்த கப்பலானது, 399.90 மீற்றர் நீளமும் 61.30 மீற்றர் அகலமும் கொண்டது.
இந்தக் கப்பல் 24,246 கொள்கலன்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் எம்எஸ்சி மரியெல்லாவின் (MSC Mariella) வருகை இலங்கையின் கடல்சார் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)