பறவைக் காய்ச்சலால் உலகின் முதல் மனித மரணம் பதிவானது

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததாகவும், பறவைக் காய்ச்சலால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இதுவாகும்.
59 வயதான அந்த நபருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)