உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்துள்ளது.
பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய கே.எல்.ராகுல் 107 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டும் அடித்து 66 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி 63 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதேபோல் கேப்டனான ரோகித் சர்மா 31 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு கோல் அடிக்க வாய்ப்பளிக்கவில்லை என்பதுடன் சவாலாகவும் இருந்தது.
இதன்படி பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ் 34 ரன்கள் கொடுத்து 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் 10 பந்துகளில் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் சம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில் அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.