உலகில் நெருக்கடிக்காலம் ஆரம்பம் – WHO விடுத்த அவசர எச்சரிக்கை
பருவநிலை மாற்றத்தால் உலகளவில் நெருக்கடிக்காலம் தொடங்கிவிட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்ரக விடுத்துள்ளது.
உலக நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் உயர்ந்துள்ளதால் ஜப்பானின் 47 மாநிலங்களில் 32 மாநிலங்களுக்குத் தகிக்கும் அனல்காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் தீவிரமாக உயர்கிறது. அனல் காற்றால் கடந்த ஆண்டு அங்கு 60,000க்கும் அதிகமானோர் பலியாயினர்.
இத்தாலியின் சிசிலி (Sicily), சார்டினியா (Sardinia) தீவுகளில் வெப்பம் 48 டிகிரி செல்சியஸை இவ்வாரம் தாண்டிவிடும். வதைக்கும் வெயில் போதாது என்று கிரீஸில் (Greece) காட்டுத்தீ சுட்டெரிக்கிறது.
80க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். லா பால்மா (La Palma) தீவிலும் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த ஸ்பானிய அதிகாரிகள் போராடுகின்றனர். தகிக்கும் வெப்பம் அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை.
மக்கள் தொகையில் கால்வாசிக்கும் மேற்பட்டோருக்கு வெப்பம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.