அன்ட்டார்ட்டிக்காவில் அதிசயத் தீவு – எரிமலையின் உச்சியில் நிரம்பியிருக்கும் ஐஸ்
அன்ட்டார்ட்டிக்காவின் மேற்குப் பகுதியில் மட்டும் 138 எரிமலைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Deception Island எனும் தீவில் துடிப்பான எரிமலை உள்ளதெனவும் நீராவி வெளியேறும் எரிமலையின் உச்சியில் ஐஸ் நிரம்பியிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
நீர்ப்பரப்பின் சில பகுதிகளில் வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸாக இருந்தாலும் கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள் முதலியவை வாழ்கின்றன.
செவ்வாய்க்கோளிலும் குளிரான சூழலில் எரிமலைகள் பல முன்பு இருந்தன. எரிமலை ஒன்று வெடித்ததால் கோளின் வளிமண்டலம் மாறியதாகவும் அங்கு இருந்த கடல்களும் நதிகளும் தோன்றிப் பின்னர் மறைந்ததாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செவ்வாய்க்கோளில் உயிரினங்கள் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை அறிய Deception Island தீவை முதலில் ஆராயவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
(Visited 7 times, 1 visits today)